Showing all 6 results
-
-
Sarva Kashta Nivarana Sakthi Devi Maha Yagna-14Apr22 to 31Jul22
₹500சர்வ கஷ்ட நிவாரண சக்தி தேவி மஹா யக்ஞம்
ஸ்ரீ ஸ்வர்ண காமாக்ஷியின் அனுகிரஹத்துடன், 14.04.2022 (வியாழன்) முதல் 108 நாட்களுக்கு ஒரு மஹா பூஜை மற்றும் யாகம் நடைபெற உள்ளது. இது உலக அமைதிக்காகவும், மக்களின் மன அழுத்தத்தை ஒழிப்பதற்காகவும், கொடிய நோய் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்காகவும், திருமண தடை விலகுவதற்காகவும், குழந்தைப் பேறு கிடைப்பதற்காகவும் இந்த யாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு ஏதேனும் குறிப்பிட்ட கவலைகள் இருந்தாலும் பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.
14.04.2022 (வியாழன்) முதல் காலை 7.30 முதல் 8.30 வரை 108 சக்தி பீடங்களில் ஒரு தேவிக்கு சிறப்பு ஹோமம் நடைபெறும். இந்த ஹோமத்தின் பொழுது ஸ்ரீ சூக்தம் மற்றும் துர்கா சூக்தம் பாராயணம் செய்யப்பட்டு ஒவ்வொரு தேவியின் பீஜாக்ஷரமும் 300 முறை ஜபிக்கப் படும் (உதாரணம்: “ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் விசாலாக்ஷை நமஸ்வாஹா” அல்லது “ஸ்ரீ கமலாயை நமஸ்வாஹா”). பூர்ணாஹுதி முடிந்ததும் அம்பாளுக்கு கலச தீர்த்தம் கொண்டு அபிஷேகம் செய்யப்படும். மாலையில் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெறும். இந்த சிறப்பு ஹோமம் அனைத்து ம் 108 சக்தி தேவிகளுக்கும் தினமும் செய்யப்படுகிறது.
பக்தர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த மகத்தான வைபவம் மற்றும் ஹோமத்தில் பங்கேற்க காணிக்கை ஒரு குடும்பத்திற்கு ரூ.500/- மட்டும். சங்கல்பம் அதிகபட்சம் 4 உறுப்பினர்களுக்கு செய்யலாம்.நீங்கள் விரும்பும் தேதியை முன்பதிவு செய்ய, நமது கோவில் அலுவலகத்தை +91 866 731 9354 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம்.
SARVA KASHTA NIVARANA SHRI SHAKTHI DEVI MAHA YAJNA
With the blessings of Shri Swarna Kamakshi, a maha puja and yagam have been organized for 108 days starting from 14.04.2022 (Thursday) for global peace, eradication of stress in people, relief from chronic illness, removal of hurdles in conducting marriage, to be blessed with a child, etc. You may also pray for any specific concerns you may have.
Starting from 14.April.2022 (Thursday), a special Homam and yagam will be conducted for one Devi of the 108 Shakthi Peet Devis from 7.30 to 8.30 a.m. During this Homam, Shri Suktam and Durga Suktam parayanam will be done, and the Beejaksharam of each Devi will be chanted 300 times (for eg., “Om Aim Hreem Shreem Visalakshyai Namaswaha” or “Shri Kamalaayai Namaswaha” etc) Once purnahuti is over, abhishekam will be done with the kalasa theertham to that Ambal. In the evening, special alankaram and deparathanai will be done to that Ambal. The homam and yagam will be conducted every day for each one of the 108 Shakthi Devis.
All devotees are requested to take advantage of this rare and unique occasion and participate in this Homam. The cost for this puja would be Rs. 500/ per family, where sankalpam can be done for a maximum of 4 members.You may contact our temple office at +91 866 731 9354 to book your preferred date or use the link provided below to book the same.
By
Temple Management -
Shri Shri Shri Maha Periyava Ashtothra Sathanaama Yajnam-13-Jun-2022 to 12-Jun-2023
₹200108 சக்திபீட ஆலயம்
மங்களபுரம் ஷேத்திரம், கண்ணன்தாங்கல்,
காஞ்சிபுரம் மாவட்டம் 602 108
+91 866 731 935ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா அஷ்டோத்ர சதநாம யக்ஞம்
13.06.2022 முதல் தினந்தோறும் – ஒரு வருட காலம்ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தின் 68-வது பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளின் சுபக்ருது வருட (2022) அவதார திருநாள் அன்று ஆரம்பித்து, சோபக்ருது வருடம் (2023) வைகாசி மாதம் அனுஷ நக்ஷத்ரம் அன்று பூர்த்தி செய்ய உத்தேசித்து, வருகிற 13.06.2022 திங்கட்கிழமை அன்று ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா சன்னதியில் புருஷ ஸூக்த விதான உபசாரங்களுடன் ஸ்ரீ சரணாளின் காயத்ரி சம்புடித அஷ்டோத்ர சதநாம யக்ஞம் நடைபெறும்.
லோக க்ஷேமார்த்தமாகவும், அனைவருடைய பிரார்த்தனைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும், பரஸ்பர அன்யோன்யம் உண்டாகவும், இயற்கை உபாதைகள் சம்பவிக்காமலிருக்கவும் வேண்டி, நித்ய சங்கல்பம் செய்து ஹோமம் செய்யப்படும். இதற்காக ரூ. 200/- மட்டும் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளவும். பணம் செலுத்தி சங்கல்பம் செய்து கொண்டவர்களுக்கு ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் திருவுருவப் படமும், ஹோம ரக்ஷையும் ப்ரஸாதமாக அனுப்பி வைக்கப்படும்.
குறிப்பு:- தினமும் காலை 8 மணிக்கு ஆரம்பித்து, இந்த ஹோமம் முடிந்தவுடன் பஞ்சத்ரவ்ய அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெறும். பிரதி மாதம் அனுஷ நக்ஷத்திரத்தன்று வேத பாராயணம் நடைபெறும்.
ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளின் பக்தர்கள் அனைவரும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பரம க்ஷேமத்தையும் குரு அருளையும் பெற வேண்டுகிறோம்.
தினமும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அன்ன பிரஸாதம் வழங்கப்படும்.
இப்படிக்கு
ஆலய அலுவலகம்108 Shakti Peet Temple
Mangalapuri Kshetram, Kannanthangal,
Kanchipuram District 602 108. +91 866 731 935Shri Shri Shri Maha Periyava Ashtothra Sathanaama yajnam
Starting from 13.06.2022 for one yearIt has been decided that a special yajna will be performed every day for a period of one year starting from the day of Jayanthi of the 68th Peetathipathi of Kanchi Kamakoti Peetam, Shri Shri Shri Maha Periyava (13.06.2022), until His next Jayanthi in Sobhakruth varsham (2023). A special Ashtothra Sathanaama yajnam will be performed along with Purusha Sooktham and various other rituals.
This is being performed for global welfare, fulfillment of our legitimate prayers, mutual harmony, to avoid natural calamities, etc. Devotees desirous of making sankalpam for this special puja to obtain those results may do so by paying Rs. 200/- and obtain a receipt for the same. A picture of Shri Shri Maha Periyava will also be sent along with homa rakshai as prasadam.
Note: This special puja will start at 8 a.m. every day, and once the homam is over, there would be Pancha-dhravya abhishekam, alankaram, Archana and deeparathanai. Veda parayanam will be chanted on the day of the Anusham star of every month.We request that all devotees of Shri Shri Maha Periyava to take part in this rare opportunity and attain divine grace and the blessing of the holy Guru.
Anna prasadam would be served every day to all devotees who attend this puja and Homam.
By
Temple Administration -
-
-
-